கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருவதன் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல மத்திய அரசும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக தமிழ் உட்பட அனைத்து மொழி திரைப்படப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் கொரோனா வைரஸ் குறித்து அவர்கள் ரசிகர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகை நிவேதா பெத்துராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நாம் அனைவரும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் உங்களையும், உங்கள் அன்பானவர்களையும் பாதுகாத்து கொள்ளுங்கள். இடைவெளியே இல்லாமல் எப்போதும் ஓடிக்கொண்டு இருந்த நமக்கு, இந்த பூமி ஓய்வு எடுப்பதற்கு நேரம் கொடுத்துள்ளது. ஆகவே இதை பயன்படுத்தி அனைவரும் வீட்டிலேயே, பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.
https://twitter.com/Actress_Nivetha/status/1243486138389524481