தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் அடி எடுத்து வைத்த பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா நடித்திருப்பார். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் காதல் கிசுகிசுகள் போன்ற சம்பவங்களில் சிக்காமல் இருந்தார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பாக பிரபல பாலிவுட் நடிகர் வினோத் மெஹ்ராவின் மகன் ரோஹன் மெஹ்ராவேடன் பூஜா டேட்டிங்கில் இருப்பதாக சொல்லப்பட்டது.
இதில் ரோஹன் பிரபல நடிகை தாரா சுதாரியுடன் காதலில் இருந்தார் என்பது பலருக்கும் தெரியும். இதனையடுத்து ரோகன் மற்றும் பூஜா இருவரும் பாலிவுட் சினிமாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் ஒன்றாகவே காணப்பட்டனர். இதனால் பூஜா மற்றும் ரோகன் காதல் விவகாரங்கள் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் காரணமாக தன்னை பற்றி பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக நடிகை பூஜா ஹெக்டே ஒரு பேட்டி கொடுத்தார். அதாவது நானும் ரோகித்தும் நல்ல நண்பர்கள் என்றும், நான் யாரையும் காதலிக்கவில்லை என்றும், நான் சிங்கிளாகவே இருக்கிறேன் என்றும் பூஜா கூறினார். மேலும் நடிகை பூஜா விளக்கம் கொடுத்த பிறகு தான் காதல் கிசுகிசு குறித்த சர்ச்சைகள் அடங்கியது.