தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூர்ணா. இவர் தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்த பூர்ணா கடைசியாக பிசாசு 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி நடிகை பூர்ணாவுக்கும் துபாய் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷானித் ஆசிஃப் என்பவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகும் நிலையில், நடிகை பூர்ணா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலை நடிகை பூர்ணா தன்னுடைய யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். மேலும் கர்ப்பமாக இருக்கும் பூர்ணாவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.