நடிகை ராக்கி சாவந்துக்கு பத்து காதலர்கள் இருக்கின்றார்கள் என வீடியோ வெளியிட்டதால் நடிகை ஷெர்லின் சோப்ரா மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மும்பை போலீசாரிடம் நடிகை ராக்கி சாவந்த் நடிகை ஷெர்லின் சோப்ரா மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் அந்த புகாரில் கூறியுள்ளதாவது, சென்ற 6-ம் தேதி நடிகை ஷெர்லின் சோப்ரா யூடியூப் மற்றும் இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோவில் தனக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசியிருக்கின்றார்.
இது பற்றி ராக்கி சாவந்த் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளதாவது, சோப்ராவின் பேச்சுக்களால் தனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்படைந்திருக்கின்றது. இதனால் என்னுடைய காதலர் தற்போது என்னை பார்த்து அவர் கூறியதில் உண்மை இருக்கின்றதா? உண்மையில் எனக்கு 10 நண்பர்கள் இருக்கின்றார்களா என கேட்கின்றார். அவர் என்ன விரும்பினாரோ அதை பத்திரிக்கையாளர்களிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அதற்கான பலனை தற்போது நான் தான் அனுபவிக்கின்றேன் எனக் கூறியிருக்கின்றார். இந்த நிலையில் ராக்கி மற்றும் சோப்ரா இடையே மோதல் ஏற்பட்டிருக்கின்றது. ராக்கி மற்றும் அவரது வழக்கறிஞர் மீதும் பதிலுக்கு சோப்ரா மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றார். செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு எதிராக அவதூறு ஏற்படும் வகையில் வீடியோவை இரண்டு பேரும் வெளியிட்டிருப்பதாகவும் தகாத வார்த்தைகளை தாக்கி பேசி இருப்பதாகவும் கூறி புகார் கொடுத்திருப்பதாக போலீசார் கூறியுள்ளார்கள்.