Categories
இந்திய சினிமா சினிமா

“வைரலான வீடியோவிற்கு” பதிலடி கொடுத்த நடிகை ரகுல் பிரீத் சிங்!

ரகுல் பிரீத் சிங்  தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆவார்.   உரடங்கு சமயத்தில் உடற்பயிற்சி செய்வதின் அவசியம் குறித்தும் தனது ரசிகர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். அதுமட்டும் அல்ல ஜிம்மில் தான் ஒர்க்அவுட் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருபவர், இதனால் பல லைக்குகளை பெற்றுவந்தார். இதில் ஆண்களை விட பெண்களின் லைக்குகள் தான் அதிகம், என்று அவர் கூறுகிறார்.

இந்நிலையில் அண்மையில்  மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடைகளில் மது வாங்குவது தொடர்பான வீடியோ ஒன்று வைரலானது. இதனை ட்விட்டரில் பகிர்ந்த ரகுல் அது குறித்து பதிலளித்துள்ளார் , “மருந்து கடைகளில் மதுபானம் விற்கப்படும் என்பதை நான்  அறிந்திருக்கவில்லை” என்று வேடிக்கையாக கூறியுள்ளார். சரி, அப்படியே வாங்கியிருந்தாலும் என்ன தவறு என ட்விட்டரில் இதுதொடர்பாக கருத்து மோதல்களும் நடந்தன.

 

Categories

Tech |