நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் ஒரு அட்டகாசமான 2 வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தானா பிரபல கன்னட நடிகை ஆவார். இவர் விஜய் தேவரகோண்டவுக்கு ஜோடியாக “கீதா கோவிந்தம்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். இந்த படம் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இவர் தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழில் முதல் முறையாக அறிமுகமாக உள்ளார். இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் ஒரு அட்டகாசமான 2 வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B2imHcOhStI/?utm_source=ig_web_button_share_sheet
https://www.instagram.com/p/B2ilhQwBCfU/?utm_source=ig_web_button_share_sheet