தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் இயக்குனர் வம்சி ஒரு பேட்டியில் வாரிசு திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, வாரிசு ஒரு பக்கா தமிழ் படம் ஆகும். முன்னதாக ராஷ்மிகா மந்தனாவிடம் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டதற்கு அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் விஜய் என்று சொன்னார்.
மெர்சல் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு மாதிரி அனுபவத்தை கொடுத்த நிலையில் வாரிசு திரைப்படம் மற்றொரு அனுபவத்தை கொடுக்கும். இந்த படம் குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் விஜய் படத்தில் இருக்கும் அனைத்துமே இந்த படத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பாக விஜய் ரிகர்சல் செய்வார். சூட்டிங் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்பாகவே விஜய் தன்னை தயார்படுத்திக் கொள்வார் என்று கூறியுள்ளார். மேலும் வாரிசு படம் குறித்து வம்சி சொன்ன தகவலால் தளபதி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.