Categories
சினிமா தமிழ் சினிமா

‘காதம்பரி’யாக மாறப்போகும் ‘பிகில்’ நடிகை..!!

தமிழில் ‘ஜருகண்டி’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘பிகில்’ திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்த ரெபா மோனிகா ஜான், கன்னடத் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார்.

‘பிகில்’ திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார் ரெபா மோனிகா ஜான். இவர் சென்ற ஆண்டு நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ‘ஜருகண்டி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் ‘பிகில்’ படத்தில் நடித்தபின்புதான், தமிழில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் ஹரீஷ் கல்யாணுடன் ‘தனுசு ராசி நேயர்களே’, விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘FIR ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்’ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Image result for ரெபா மோனிகா ஜான் பிகில்

இதைத்தொடர்ந்து கன்னட திரையுலகில் ‘சகலகலா வல்லபா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவிருக்கிறார் ரெபா மோனிகா. இத்திரைப்படமானது 2015ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘நானும் ரெளடி தான்’ திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் நயன்தாரா நடித்த ‘காதம்பரி’ கதாபாத்திரத்தில் ரெபா நடிக்கவுள்ளாராம்.

Categories

Tech |