நடிகை சமந்தா உலகிலேயே மிகப்பெரிய வலி, பிரசவ வலி என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன், நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் வருடத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார்கள். அதன் பின்பு, மீண்டும் சமந்தா திரைப்படங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்.அதன்படி சமீபத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி அதிக வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை சமந்தா தெரிவித்திருப்பதாவது, அதிக வலிமை உடையவர்கள் பெண்கள் தான். உலகிலேயே மிகப்பெரிய வலி இருக்கிறது, என்றால் அது பிரசவம் தான். அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு ஒரு பெண், குழந்தை பெற்றெடுக்கிறாள்.
அதே நேரத்தில் தான் பெற்ற குழந்தையை பார்த்தவுடன் அனைத்து வலியும் மறந்து, அந்தப் பெண் சிரிக்கிறாள். அதற்கு ஈடு இணையே கிடையாது என்று குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இவர் பதிவிட்ட கருத்து இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.