Categories
சினிமா

புஷ்பாவை தொடர்ந்து…. அடுத்தும் ஐட்டம் டான்ஸ் ஆடப்போகும் சமந்தா… வெளியான தகவல்…!!!

புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற, “ஊ சொல்றியா” பாடல் ஹிட்டானதையடுத்து நடிகை சமந்தா மீண்டும் இதேபோன்ற பாடலுக்கு நடனம் ஆடயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த மாதத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற 5 மொழிகளில் வெளியானது. இத்திரைப்படத்தில், அல்லு அர்ஜுனின் நடிப்பு, திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் அதிகமாக பாராட்டப்பட்டது.

மேலும், இத்திரைப்படத்தில் நடிகை சமந்தா, “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். இந்தப்பாடல் தொடர்பில் சில சர்ச்சைகள் கிளம்பினாலும், ஹிட்டானது. யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. தற்போதும், இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த பாடலுக்கு நடனமாடிய நடிகை சமந்தா, ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றார்.

அவரின், முகபாவனைகள் மற்றும் நடனம் ரசிகர்களை அதிகமாக ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டாவின், லிகர் என்ற திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது பற்றி அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடப்படவில்லை.

Categories

Tech |