தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் மயோசிடிஸ் என்னும் அரிய வகை சரும பிரச்சனை நோயினால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்ததோடு திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சமந்தாவுக்கு திடீரென உடல்நிலை மோசமானதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் நடிகை சமந்தாவின் உதவியாளர் அவர் நலமுடன் இருப்பதாகவும், தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் என்றும் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் தற்போது தெலுங்கு இணையதளங்களில் நடிகை சமந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு படுத்த படுக்கையாக கட்டிலை விட்டு இறங்கி சிறிது தூரம் கூட நடந்து செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அதிர்ச்சி தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் சமந்தா விரைவில் குணமடைந்து வரவேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு பிரார்த்தனையும் செய்து வருகிறார்கள்.