Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தாவின் “யசோதா”…. டிரைலர் வீடியோ வெளியீடு…. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது ஹரி ஹரிஷ் இயக்கத்தில் யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ் மற்றும் மதுரிமா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள யசோதா திரைப்படம் 5 மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில் படக்குழுவினருக்கும் சமந்தாவுக்கும் இடையே சில பல பிரச்சினைகள் நடப்பதால் தான் யசோதா படத்தின் வெளியீடு தள்ளி போவதாக சமீபத்தில் தகவல்கள் பரவியது. இந்த சூழ்நிலையில் யசோதா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் யசோதா திரைப்படம் வருகிற நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |