Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் திருமணம் நடக்கல… வழக்கமான ஒன்றுதான்… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை…!!

நடிகை சனம் செட்டி தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், நெற்றியில் குங்குமம் வைத்து கொள்வது வழக்கமான ஓன்று என்றும் கூறியுள்ளார்.

நடிகை சனம் செட்டி பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான தர்ஷனும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் நடக்கவிருந்த இவர்களது திருமணம் நின்றுவிட்டது.

இந்நிலையில் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது குறித்து சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் சனம் செட்டியிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சனம் செட்டி தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், அனைவரின் ஆசியுடன் கண்டிப்பாக ஒரு நாள் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். அதோடு அவர்கள் வீட்டில் திருமணமான பெண்கள் மட்டுமின்றி மற்ற பெண்களும் நெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பது வழக்கமான ஒன்றுதான் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |