திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ’அலா வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramloo). இதில் தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இதில் ‘சாமஜவரகமனா’ (Samajavaragamana) ராமுலோ ராமுலா (Ramuloo Ramulaa) புட்ட பொம்மா புட்ட பொம்மா(Buttabomma) என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதில் புட்ட பொம்மா பாடலுக்கு சமூகவலைதளத்தில் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டிக் டாக் செய்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். தற்போது புட்ட பொம்மா பாடலுக்கு பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி டிக்டாக் செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வரும் ஷில்பா அவ்வப்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்று ரசிகர்களை தனது கட்டுக்குள் வைத்திருப்பார்.
தற்போது அசல் புட்ட பொம்மா பாடலின் வீடியோவை விட ஷில்பா ஷெட்டியின் புட்ட பொம்மா பாடலின் டிக் டாக் வீடியோ அதிக வரவேற்பை பெற்று இணையத்தை கலக்கி வருகிறது.
https://www.instagram.com/p/B8YCqX0h9oU/?utm_source=ig_web_button_share_sheet