Categories
சினிமா

“15 வருஷமாவா நடந்துச்சு!”…. ஷில்பா ஷெட்டியை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட நடிகர்… நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!!

நடிகை ஷில்பா ஷெட்டியை, ஹாலிவுட் நடிகர் வலுக்கட்டாயமாக கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக 15 வருடங்கள் கழித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சில்பா செட்டி கடந்த 2007ம் வருடம் ராஜஸ்தானில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார். அப்போது எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சிறப்பு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த, ரிச்சர்ட் கேர் என்ற பிரபல ஹாலிவுட் நடிகர், ஷில்பா ஷெட்டியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

அப்போது, இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பொது இடத்தில் நாகரீகமின்றி நடந்ததற்காக  சில்பா செட்டி மற்றும் ரிச்சர்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 2017 ஆம் வருடத்தில் இந்த வழக்கு, ராஜஸ்தானிலிருந்து மும்பை நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் சுமார் 15 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கிற்கு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அதாவது, நடிகை சில்பா செட்டி மீது தவறு இல்லை என்றும் இந்த வழக்கில் அவர் பாதிக்கப்பட்டவர் தான் என்றும் நீதிமன்றம் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் ரிச்சர்ட் தான் முக்கிய குற்றவாளி எனவும் அவர் தான் கட்டாயமாக ஷில்பாவிற்கு முத்தமிட்டார் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |