நடிகை ஸ்ரேயா தனது குழந்தையுடன் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். ”எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், கந்தசாமி, குட்டி, ரௌத்திரம், அழகிய தமிழ்மகன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஷ்ரேயா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் வழக்கமாக தனது கணவருடன் விளையாடும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவார். இந்நிலையில், இவர் தற்போது பகிர்ந்த வீடியோ ஒன்று ரசிகர்களை ஆச்சரியம் அடையச் செய்துள்ளது. அந்த வீடியோவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தனக்கு குழந்தை பிறந்ததாக கூறியுள்ளார். ஸ்ரேயாவின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CU5GnpSsaSB/