தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா சரண் கொரோனா வைரசால் தனக்கும் தனது கணவருக்கும் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். பார்சிலோனாவில் இருக்கும் ஷ்ரேயா இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கூறியதாவது: “நானும், என்னுடைய கணவரும் திருமண நாள் விழாவை கொண்டாடுவதற்காக ஒரு ஹோட்டலுக்கு செல்ல முடிவு செய்து, அதற்க்காக முன்பதிவும் செய்தோம். ஆனால் அங்கு சென்றபோது ஹோட்டல் மூடி இருந்தது.
மேலும் சுற்றியுள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அதைதொடர்ந்து சில நாட்களில் ஸ்பெயின் முழுவதுமே ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதனால் முக்கிய தேவைகள் இருந்தால் வீட்டிலிருந்து ஒருவர் மட்டும் வெளியே வரலாம் என்று போலீசார் சில கட்டுப்பாடுகள் விதித்தனர். ஒரு கட்டத்தில் தனது கணவர் ஆண்ட்ரிக்கு காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது. பின்னர் உடனே மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு மருத்துவர்கள் உங்கள் கணவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை.
நீங்கள் உடனே வீட்டுக்கு செல்லுங்கள். இங்கே இருந்தால் உங்களுக்கு கொரோனா தொற்று வந்துவிடும் என்றனர். இதையடுத்து உடனே வீட்டுக்கு வந்து இருவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டோம். இருவரும் தனித்தனி படுக்கை அறைகளை பயன்படுத்தினோம். வீட்டில் சமூக விலகலை கடைப்பிடித்தோம். இப்போது நன்றாகவே இருக்கின்றோம். தினமும் யோகா தியானம் செய்கிறேன். என் பெற்றோர் மும்பையில் இருக்கின்றனர்” என்று ஸ்ரேயா கூறினார்.