Categories
சினிமா

முதலில் காதலை கூறியது யார்….? காதலர் பற்றி ரசிகர்களிடம் கூறிய ஸ்ருதி ஹாசன்…!!!

நடிகை சுருதிஹாசன், தன் காதலர் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

உலக நாயகன் கமலஹாசனின் மகளான சுருதிஹாசன், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர், தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CYf6LQ7hAKL/

ஸ்ருதிஹாசன் தற்போது, சாந்தனு ஹசாரிகா என்ற டூடுல் கலைஞரை காதலித்து வருகிறார். இருவரும், தற்போது மும்பையில் தான் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், ஸ்ருதிஹாசன், தன் காதலருடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் சுருதிஹாசன், இருவரில் யார் முதலில் காதலை வெளிப்படுத்தியது? என்ற கேள்விக்கு, நான் தான் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |