நடிகை ஸ்ருதிஹாசன் மலைப்பாதையில் தான் லாரி ஓட்டிய அனுபவம் பற்றி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
ஊரடங்கு நாட்களில் சமூக வலைதளங்களில் திரை பிரபலங்கள் பலரும் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பகுதியில் ‘யாத்ரா’ என்ற டிஜிட்டல் படத்திற்காக லாரி ஓட்டிய அனுபவத்தை நடிகை ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது ” நான் பெரிய டிரைவர் இல்லை என்பது நிறைய பேருக்கு தெரியாது. எனக்கு துணையாக ஸ்டண்ட் கலைஞர்கள் இருந்தனர். எனக்கு அருகிலேயே அமர்ந்து கிளட்ச் மற்றும் கியர் போட உதவினார்.
உண்மையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவலே. இது எளிதான வேலை கிடையாது, அதோடு இது வேடிக்கையாக இருந்தது. உத்ரகாண்ட் மலைப்பகுதி சாலையில் லாரி ஓட்டுவது மிகப்பெரிய டாஸ்க் என்று பதிவிட்டுள்ளார்”. இவர் தற்போது எஸ்பி ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்துள்ளார். தெலுங்கில் ரவிதேஜாவுடன் ‘கிராக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ‘கேங்ஸ்டோரி’ என்ற பிரஞ்ச் படத்தில் ரீமேக்கான ‘யாத்ரா’ என்ற டிஜிட்டல் படத்தில் நடித்து வருகிறார்.