பிரபல நடிகை சிம்ரன், அனைத்து காலகட்டங்களிலும் தன்னை பொறுத்தவரை மிகவும் சிறந்த நடிகர் ரஜினிகாந்த் என்று கூறியிருக்கிறார்.
1990ஆம் காலகட்டங்களில், அதிகமான ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் அறிமுகமான திரைப்படம் வி.ஐ.பி. இதில் பிரபுதேவாவுடன் நடித்திருந்தார். இதனையடுத்து, அஜித், விஜய், சூர்யா, பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
https://twitter.com/SimranFC/status/1421047605648257027
திருமணமான பின்பும், சிம்ரன் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். தற்போது, நடிகர் பிரசாந்த் நடிக்கும் “அந்தகன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இணையதளத்தில், ரசிகர்களின் கேள்விக்கு சிம்ரன் பதிலளித்தார். அப்போது, ஒரு ரசிகர் அனைத்து காலகட்டங்களிலும் சிறந்த நடிகர் யார்? என்று கேட்டதற்கு, என்னை பொறுத்தவரை “ரஜினிகாந்த்” என்று கூறியிருக்கிறார்.