Categories
சினிமா

“நல்ல வேளை 2 டோஸ் தடுப்பூசி போட்டேன்!”…. -ஒமிக்ரான் பாதித்த நடிகை விளக்கம்….!!

நடிகை சோபனா, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாம் அலை பரவி வருகிறது. முதல் இரண்டு அலைகளில் தப்பித்தவர்களும், இதில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், நடிகை சோபனா, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். இவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இதுபற்றி அவர் தன் இணையதளப்பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றியும் எனக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கிறது. முதல் நாளில், கால்களில் வலியும், தொண்டை வலியும் ஏற்பட்டது.

ஆனால், அதற்கு அடுத்த நாட்களில் எந்த அறிகுறியும் இல்லை. நல்லவேளையாக, நான் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக் கொண்டேன். எனவே, பாதிப்பு குறைவாக இருக்கிறது.  அனைத்து மக்களும் தயவுசெய்து தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |