Categories
சினிமா

பாரில் நிற்பது யாரு….? நம்ம சோனியா அகர்வாலா…? வைரலாகும் புகைப்படம்…!!!

பிரபல நடிகை சோனியா அகர்வால் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார் நடிகை சோனியா அகர்வால். அதனைத்தொடர்ந்து, விஜய், சிம்பு போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். அதிகமாக, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த திரைப்படங்கள் தான் சோனியா அகர்வாலுக்கு வெற்றிப் படமாக அமைந்தது.

https://www.instagram.com/p/CZbPpgepIQ5/

அதன் பின்பு, கடந்த 2006 ஆம் வருடத்தில் இயக்குனர் செல்வராகவனை சோனியாஅகர்வால் திருமணம் செய்தார். அதற்குப்பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. கடந்த 2010-ஆம் வருடத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தார்கள். இந்நிலையில் திரைப்படங்களில் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சோனியா அகர்வால், இணையதள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர், ஒரு பாரில் நின்று கொண்டிருக்கிறார்.

Categories

Tech |