தற்போது டிஜிட்டல் தளத்தில் கதைகள் பலவும் சிறப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் பல நடிகர்களும் வெப் சீரிஸில் ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர். தமிழிலும் சிறந்த திறம் வாய்ந்த நடிகர்கள் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வத்துடன் முன்வருகின்றனர். இந்நிலையில் நடிகை தமன்னாவும் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளி வரும் வெப் சீரிஸில் நடிக்கப்போகிறார்.
தமிழில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த வெப் சீரிஸுக்கு ‘த நவம்பர் ஸ்டோரி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தந்தை – மகளின் உறவைப் பற்றி, மையமாகப் பேசவரும் இந்தக் கதையில் தமன்னா மகளாக நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குநர் ராம் சுப்ரமணியன் இயக்கும் இக்கதையை விகடன் ஒளித்திரை தயாரிக்கிறது.