நடிகை வேதிகா டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் மதராசி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதனைத் தொடர்ந்து முனி, காளை, சக்கர கட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மேலும் இவர் நடித்த பரதேசி மற்றும் காவியத்தலைவன் போன்ற படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
கடைசியாக இவர் காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பலரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.
https://twitter.com/Vedhika4u/status/1277939621788172289