நடிகை ஸ்ரேயா பந்தா இல்லாத நடிகை என பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான அரசாங்கம், மிரட்டல், மோகினி உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் மாதேஷ். இவர் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விமல் ஹீரோவாகவும் பிரபல நடிகை ஸ்ரேயா ஹீரோயினாக நடித்து வரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இத்திரைப்படத்தில் தேவ் கில் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் மாதேஷ் இப்படத்தில் பணியாற்றிய ஸ்ரேயாவை பற்றி கூறியதாவது, “மும்பை ஹீரோயின்கள் என்றாலே தாமதமாக வருவார்கள், பாதுகாப்பு படையுடன் வருவார்கள், முக்கியமாக பந்தா பண்ணுவார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். எனது கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்தேன்.
ஆனால் நான் நினைத்த மாதிரி எல்லாம் இல்லை. அவர் பந்தாவாகவும் இல்லை, பாதுகாப்பு படையும் கேட்கவில்லை. குறித்த நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்து விடுவார். அவரால் படப்பிடிப்பில் எந்த தொல்லையும் ஏற்படாது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் அவரது காட்சிகள் படமாக்கப் பட்ட பின்னரும் செட்டை விட்டு போகாமல் மற்ற நடிகர்கள் நடப்பதை பார்த்துக் கொண்டிருப்பார்” என்று கூறியுள்ளார்.