‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை யாமி கௌதம். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், அமிதாப் பச்சன், ரித்திக் ரோஷன், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலரது படங்களிலும் நடித்துள்ளார்.யாமி தற்போது ‘கின்னி வெட்ஸ் சன்னி’ என்ற பாலிவுட் படத்தில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.அப்போது அவருக்கு பிடித்த நடிகர்கள் பற்றி கேட்டதற்கு, ரன்வீர் சிங், ரன்பீர் கபூர் ஆகியோர்தான் பாலிவுட் திரையுலகில் மிக ஸ்டைலிஷான நடிகர்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து குடியுரிமை சட்டம் மற்றும் போராட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த யாமி, ‘முதலில் அமைதி முக்கியம் என நினைக்கிறேன். இவை அனைத்தும் சுமூகமான முறையில் முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம். வன்முறையை கைவிட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.