Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அட எல்லாமே பக்கா பிளான்தான்” ….. சொல்லி அடிச்சிருக்காரு …. ‘இஷான் கிஷனின் கெத்தான பேச்சு ‘….!!!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில்  அறிமுக வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் .

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரம்மதேசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை குவித்தது.இதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு  263 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்தப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் முதல் பந்திலேயே சிக்சருக்கு “எனக்கு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய முதல் பந்தை சிக்சருக்கு அடிப்பேன் என டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் போது வீரர்கள் அனைவரிடமும் கூறியிருந்தேன்.

நான் சொன்னபடியே முதல் பந்தை சிக்சருக்கு அடிப்பேன் என்று முன்பே அனைவருக்கும் தெரியும். மேலும் என்னுடைய பிறந்த நாளில் இந்த போட்டியில் விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது “என்று அவர் கூறினார். இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை காட்டிய இஷான் கிஷன் 42 பந்துகளில் 2சிக்சர்கள், 8 பவுண்டரிகளை அடித்து விளாசி 59 ரன்கள் குவித்தார். இதற்கு முன் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் அறிமுக வீரராக விளையாடிய இஷான் கிஷன் அரை சதம் அடித்து அசத்தினார். இதனால் அறிமுகமான டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் அரைசதத்தை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Categories

Tech |