Categories
மாநில செய்திகள்

அட! என்ன இப்படி சொல்லிட்டாரு!…. அழைப்பு விடுத்த ஸ்டாலின்…. புறக்கணித்த இபிஎஸ்….. வெளியான தகவல்….!!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் பொன்முடி, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்பி வில்சன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

அதன் பிறகு நவம்பர் 12ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இட ஒதுக்கீடு விவாகரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று அதிமுக புறக்கணிப்பதாக கூறியுள்ளது.

Categories

Tech |