உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்றுவதற்காக சுரேஷ் சந்திரா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்து முடித்து வீட்டுக்கு திரும்பினார். அதன் பிறகு அக்டோபர் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கடும் வலி ஏற்பட்டது. இதனால் மற்றொரு மருத்துவரிடம் சென்றுள்ளார். அங்கு அவர் ஸ்கேன் செய்துள்ளார்.
அப்போது அவரது இடது பக்க சிறுநீரகமே காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து சுகாதாரத் துறையிடம் அவர் புகார் அளிக்கப்பட்டு உரிய விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இது குறித்து சுரேஷ் சந்திரா கூறியது, எனக்கு நடந்ததை கூறி அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனை தொடர்பு கொண்டு கேட்டேன். ஆனால் அது பற்றி யாருமே பதிலளிக்கவில்லை. உடனடியாக சுகாதாரத் துறையிடம் முறையிட்டேன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.