தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்ச கதாபாத்திரங்களிகி கொள்ளை அடிப்படியாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வினோத் நடிகர் அஜித்திடம் முதன்முதலில் துணிவு திரைப்படத்தின் கதையை கூறியதாகவும், அஜித் கதையை முதலில் நிராகரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அஜித் போனி கபூரின் தயாரிப்பில் பிங்க் படத்தின் ரிமைக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் தான் நடிக்க இருந்தாராம். அப்போது வினோத் துணிவு கதையை கூறியுள்ளார். அதற்கு கதை நன்றாக இருப்பதாகவும், ஆனால் முதலில் பிங்க் ரீமேக்கை முடித்துவிட்டு அடுத்ததாக துணிவு கதையில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே துணிவு படம் தள்ளி போனதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.