Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்னப்பா சொல்றீங்க!…. ஜி.பி.முத்து திடீர் கைதா?…. ஷாக்கில் ரசிகர்கள்…. லீக்கான தகவல்….!!!

சமீபத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜி.பி.முத்து கலந்து கொண்டார். இவர் சோசியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜி.பி.முத்து 2 வது வாரத்திலேயே வீட்டின் தலைவரானார். இவரின் ஒவ்வொரு செயலும் வலைதளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாக்காத நிலையில் இரண்டு வாரத்தில் தனது குடும்பத்தினர் ஞாபகம் இருப்பதாக கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கடைசி வரை மற்றபோட்டியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து 2 வது வாரத்திலேயே வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஓ மை கோஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழாவில் சன்னி லியோன் உடன் ஜி.பி.முத்து செய்த அட்ராசிட்டி இணையதளத்தில் வைரலானது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜி.பி. முத்துக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் ஜி.பி. முத்துவை கைது செய்து கூட்டிச்செல்லும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜி.பி.முத்து சமீப காலமாக புது படங்களில் புரோமோஷனுக்காகவும் வீடியோ வெளியிட்டு வருகிறார். அதன்படி கடந்த வாரம் வெளியான லவ் டுடே படத்துக்காக இயக்குனர் பிரதிபுடன் சேர்ந்து அவர் வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலானது. தற்போது பரோல் படத்துக்காக புரமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தொடக்கத்தில் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் இருவர் ஜி.பி.முத்துவை கைது செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாக பரவியது. இதனால் ஜி.பி.முத்து கைது செய்யப்பட்டதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடைசியில் அது பிராங் வீடியோ என்று தெரியவந்ததும் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

Categories

Tech |