சிங்கப்பூரில் போலீஸ் முன்பு ஒருவர் இருமி 14 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவராஜ் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் தன் தோழியை தாக்கியுள்ளார். அதனால் போலீசார் அவரை தன் தோழியை தாக்கிய குற்றத்திற்காக அவரை கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் போலீசார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் போலீசாரும்தன்னுடைய முக கவசத்தை அகற்றக்கூடாது என எச்சரித்துள்ளனர்.
ஆனால் அவர் அதை காது கொடுத்து கேட்கவில்லை. அதன்பிறகு தன்னுடைய முக கவசத்தை கழற்றிவிட்டு போலீஸ்காரர் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டுமென்று இருமி, தகாத வார்த்தையில் பேசினார். இதனால் கோபம் அடைந்த போலீஸ்காரர் பொது இடத்தில் மது அருந்தியது, வாகனம் ஓட்டத் தடை இருந்தபோது மோட்டார் சைக்கிளில் சென்றது என பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துயுள்ளானர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி செங் தியாம் என்பவர் இவருக்கு 14 வாரம் சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளார் அதனால் தற்போது அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.