தமிழ் திரையுலகில் சில நடிகர்களுக்கு மக்கள் மனதில் தனிஇடம் இருக்கும். அதுபோன்ற ஒரு நடிகர் தான் விஜயகாந்த். திரையுலகில் பல்வேறு படங்கள் நடித்து எப்படி மக்கள் மனதை கவர்ந்தாரோ, அதுபோன்று அரசியலிலும் ஈடுபட்டு நன்றாக வந்தார். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் வீட்டில் முடங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியது.
இதனிடையில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது பிறந்தநாளை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் விஜயகாந்துடன் எடுத்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதன்பின் ரசிகர்கள் கேப்டனா இது, உடல் எடை குறைந்து காணப்படுகிறார் என வருத்தப்பட்டு கேள்வி எழுப்பினர்.