மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல். இவர் தமிழில் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் சினிமா அனுபவம் குறித்து அனு இம்மானுவேல் அளித்துள்ள பேட்டியில், நல்ல கதையை தேர்வு செய்வது, கொடுத்த கதாபாத்திற்கு நியாயம் செய்வது மட்டுமே எனது கையில் இருக்கும். நான் நடித்த சில படங்கள் ஓடாமல் இருந்தது. இருப்பினும் நடிகையாக மட்டும் எப்போது நான் தோற்றுவிடவில்லை. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சினிமா துறையில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது.
அதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு ஹீரோ யார் என்ற விஷயத்தை விட கதை தான் உயர்வாக இருக்கிறது. அவர்கள் கதைக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது சில படங்களில் வெற்றியை பார்த்த பிறகு தெரிந்து கொண்டேன். இதனையடுத்து நடிகையாக நானும் கதைகளை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும் என முடிவு செய்து கொண்டேன். எனக்கு ஏற்ற நல்ல கதை கதாபாத்திரம் கிடைக்காவிட்டால் வீட்டில் சும்மா வேணும்னாலும் இருந்து விடுவேன். மேலும் படத்தின் வெற்றி என்பது என் கையில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.