ஆதார் விண்ணப்பம் மற்றும் விவரங்கள் மற்றம் போன்றவற்றை இனி தபால் அலுவலகங்களிலேயே செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் ஆதார் கார்டு திருத்தம் செய்வது மற்றும் அதற்கான ஆவணங்களை என்னென்ன என்று பார்க்கலாம். ஆதார் அமைப்பின் அடிப்படை மொத்தம் முப்பத்திரண்டு ஆவணங்கள் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஆதார் கார்டு ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இது போன்ற டிஜிட்டல் ஆதார் கார்டும் இருக்கிறது. இந்நிலையில் இனி ஆதார் கார்டு தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஆதார் கார்டு அப்டேட் செய்வது, ஆதார் வாங்க விண்ணப்பித்தல், விபரங்களை மாற்றுதல் போன்ற சேவைகளை இனி தபால் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
இதன் முதற்கட்டமாக உத்திர பிரதேசத்தில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து மற்ற மாநிலங்களுக்கும் இந்த சேவை வரும் என்று கூறப்பட்டுள்ளது. பக்கத்தில் தபால் அலுவலகங்கள் இல்லாதவர்கள் ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டு பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆதார் விவரங்களை மாற்ற வேண்டுமென்றால் வீட்ட்டிலிருந்து ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம்.