Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு…. 4 பெண் குழந்தைகளை அனாதையாக்கிய தந்தை…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் ஷெட்டிஹள்ளி கிராமத்தில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சம்மா. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் மஞ்சம்மா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நேற்று முன் தினம் மஞ்சம்மாமாவுக்கு சீனிவாசப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. இதில் 4 வது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் மஞ்சம்மாவும் லோகேஷும் மனம் உடைந்து, சோகமாக இருந்து வந்தனர். மனைவி மருத்துவமனையில் இருந்த நிலையில் லோகேஷ் மட்டும் வீட்டுக்கு வந்தார். பிறகு அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது மகள்கள் அதிர்ச்சி அடைந்து, அலறி அடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

இதனால் பதற்றம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சீனிவாசபூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன் பிறகு அவர்கள் லோகேஷ் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் நடத்திய சோதனையில் லோகேஷ் கைப்பட எழுதி வைத்திருந்த ஒரு உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினார். அந்த கடிதத்தில், “ஏற்கனவே எங்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களை கரை சேர்ப்பதே எங்களுக்கு பெரிய விஷயம். இந்நிலையில் 4 வது ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்தேன். ஆனால் நான்காவதாக பெண் குழந்தை பிறந்தது. இதனால் நான் மனம் உலைச்சலுக்கு ஆளாகி, நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். என் சாவுக்கு நானே முழு பொறுப்பு. வேறு யாரு காரணம் இல்லை” என்று எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |