Categories
தேசிய செய்திகள்

அட போங்கடா உங்க காசே வேண்டாம்…. 100 கிலோ பூண்டு…. ஆத்திரத்தில் விவசாயி செய்த செயல்….!!!!

மத்திய பிரதேசத்தில் பூண்டு விலை குறைந்ததையடுத்து விவசாயி ஒருவர் கோபத்தில் விவசாய பொருள் சந்தையில் பூண்டை தீயிட்டு எரித்துள்ளார். உஜ்ஜைனியில் உள்ள தியோலி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி சங்கர். இவர் தான் விளைவித்த பூண்டை விற்பதற்காக மந்த்சௌரின் உள்ள விவசாய பொருள் சந்தைக்கு சென்றுள்ளார். ஆனால் சந்தையில் பூண்டு மிகவும் குறைவான விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி தன் கொண்டுவந்த 100 கிலோ பூண்டையும் தீயிட்டு கொளுத்தினார்.

இதைப் பற்றி அறிந்த சந்தை ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். அதன் பின்னர் சந்தை ஊழியர்கள் கோபத்தில் இருந்த விவசாயியை சந்தை அலுவலகத்திற்கு அழைத்து சமாதானம் செய்துள்ளனர். இதுபற்றி விவசாயி சங்கர் பேசுகையில், நான் இந்த 100 கிலோ பூண்டை உற்பத்தி செய்வதற்கு 2.5 லட்சம் முதலீடு செய்துள்ளேன். ஆனால் இதற்கு வெறும் 1 லட்சம் மட்டுமே விலை கேட்டுள்ளனர். அதனால்தான் கோபத்தில் பூண்டை எடுத்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |