Categories
மாநில செய்திகள்

செந்தில் பாலாஜி பதவி நீக்கம்?…. முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன?…. வெளியான தகவல்…!!!

திமுக அரசின் பால் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் நாளை மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக எழுச்சியாக நாட்டு மக்களுக்கு ஆதரவாக விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும். அரவக்குறிச்சியில் 50,000 பேருக்கு மின் இணைப்பு தருவதாக கூறி கணக்கு காட்டி இருக்கிறார்கள். போலி நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள்.

ஏற்கனவே ஒரு லட்சம் பேருக்கும் தற்போது 50,000 பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுவது பொய். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையை ஏற்று அமைச்சரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது முதல்வரின் பொறுப்பு. விசாரணை தீர்ப்பு வரும் வரை பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் நம்பிக்கை வரும். இதனையடுத்து வெள்ள வடிகால் பகுதிகள் 90% பணிகள் முடிந்து விட்டதாக சொன்னது பொய். இன்றும் அந்த காட்சிகளை பார்க்கும் போது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. நம்பிக்கை நாணயத்துடன் இருக்க வேண்டும். கொஞ்ச காலத்துக்கு நல்லபடியாக இருக்க வேண்டும். அவர்களுடைய ஆட்சி காலத்தை முழுமையாக ஆள வேண்டும். இலவச மின் இணைப்பு பெற்ற பயனாளிகள் பெயர், முகவரி, ஆதார் எண்ணுடன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |