செவ்வாய் கிரகத்தில் அதிநவீன ஹெலிகாப்டரை பறக்கவிட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா விண்கலத்தில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அமைந்துள்ளது. அது கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெர்வரன்ஸ்ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது . அந்த விண்கலத்துடன் இன்ஜெனுயிட்டி என்ற மிக சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்றும் பொருத்தி அனுப்பட்டது . அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டது .
அதன்பிறகு அந்த விண்கலம் கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது . அவ்வாறு தரை இறங்கிய விண்கலம் செவ்வாய் கிரகத்தை படம் எடுத்து நாசாவுக்கு அனுப்பிவைத்தது . அந்த அதி நவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் வருகின்ற ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் பறக்கவிடப்படும் என்று நாசாவின் அறிவியல் இயக்குனர் பாபி பிரவுன் தெரிவித்துயுள்ளார் . அதுமட்டுமல்லாமல் விமானத்தைமுதன் முதலில் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களின் முதல் விமானத்தின் ஒரு பகுதியை இந்த ஹெலிகாப்டரில் இணைத்துள்ளனர்.
மேலும் ரைட் சகோதரர்களின் சொந்த ஊரான ஓகியோவின்டேட்டாலில் உள்ள வரலாற்று பூங்காவில் இருந்து முதல் விமானத்தின் கீழ் இருந்த சிறிய அளவிலான மெல்லிய துணியை நாசாவின் வேண்டுகோளின் அடிப்படையில் நன்கொடையாக அளிக்கப்பட்டது. அதனால் அந்த சிறிய ரக ஹெலிகாப்டரில் இந்த மெல்லிய துணியை பொருத்தி செவ்வாய் கிரகத்தில் பறக்கவிட உள்ளனர். இதன் மூலம் உலகத்துக்கு வெளியே முதல்முறையாக வேறு கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிடும் பெருமை நாசா பெரும் .