இயக்குனர் எச். வினோத் இயக்கத்தின் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தில் சமுத்திரக்கனி போலீஸ் கெட்டபில் நடித்துள்ளார்.
நடிகர் அஜித், எச். வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் தான் துணிவு. இந்த துணிவு திரைப்படத்தின் ரிலீஸ்கான இறுதி கட்டப் பணிகள் வெறித்தனமாகவும் தீயாய் நடைபெற்று வருகின்றது. நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு” படத்துடன் நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படம் மோதவுள்ளதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் படத்தின் ரிலீஸ்காக ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த திரைப்படம் சூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
எனவே பொங்கல் பண்டிகையே முன்னிட்டு “துணிவு” திரைப்படம் ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி போலீஸ் கெட்டப்பில் “துணிவு” படப்பிடிப்பில் வினோத்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அத்துடன் ஃபர்ஸ்ட் சிங்கிளாக “சில்லா சில்லா” என்ற பாடல் வெளியாவதாக கூறப்படுகின்றது. மேலும் துணிவு படத்தின் அடுத்தடுத்து புதிய அப்டேட்டால் ரசிகர்கள் கொண்டாட்டத்திலுள்ளனர்.