இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் திரைப்படத்தில் மெட்டி ஒலி கோபி நடிப்பதாக வதந்தி கிளம்பியுள்ளது.
இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி நாதஸ்வரம் போன்ற தரமான சீரியல்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கும் சீரியலில் தனது பெயரை கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பார். இதனாலே எல்லோரும் திருமுருகனை கோபி என்று அழைப்பார்கள். இவர் தற்போது எந்த சீரியலும் இயக்கவில்லை. இயக்குனர் மற்றும் நடிகரான போஸ் வெங்கட் தற்போது நடிகர் விமல் வைத்து “மாபொசி” என்ற திரைப்படத்தை இயக்கிய வருகின்றார். திருமுருகன் தனது மெட்டி ஒலி சீரியலில் போஸ் வெங்கட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் திருமுருகன் குருவாக தனது சிஷ்யனின் படப்பிடிப்பு தளத்திற்கு கெஸ்ட்டாக பார்வை விட சென்றுள்ளார். இவர் ஷிட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போன்ற போட்டோஸ் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. அந்த போட்டோஸை பார்த்த நெட்டிசன்கள் விமல் படத்தில் கோபி புதிய கெட்டப்பில் நடிப்பதாக வதந்தி கிளம்பி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.