Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம க்யூட்….. ரன்பீர்-ஆலியா குழந்தைக்கு பெயர் வச்சாச்சு….. என்னனு நீங்களே பாருங்க….!!!!!!

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதியினர் தங்கள் மகளுக்கு ராஹா என்று பெயரிட்டுள்ளனர்.

பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவான பிரம்மாஸ்திரா படப்பிடிப்பின் போது நெருக்கமாக பழகத் தொடங்கினர். இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோடியாக முதலில் தோன்றினர். அதிலிருந்து அவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

நவம்பர் 7 ஆம் தேதி மும்பையையில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அந்த குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்க  என்று தொடர்ந்து பல பெயர்கள் தேர்வு செய்து வந்துள்ளனர். பின்னர் தன் மகளுக்கு ராஹா என பெயரிட்டு இருப்பதாக ஆலியா தெரிவித்துள்ளார். இந்த பெயரை அப்பா ரன்பீர் கபூரின் அம்மா தான் தேர்வு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பெயரின்  அர்த்தம்  என்னவென்றால் அதன் தூய வடிவத்தில், பெயர் தெய்வீக பாதை என்று பொருள்படும். சுவாஹிலி மொழியில் இது மகிழ்ச்சி. சமஸ்கிருதத்தில் அது குலத்தை குறிக்கிறது. அரபியில் அது அமைதியைக் குறிக்கிறது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

Categories

Tech |