Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. மீண்டும் புது பொலிவுடன் ஏவிஎம் ஸ்டுடியோ…. எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க….!!!!

ஏவிஎம் ஸ்டுடியோ தற்போது புது பொலிவுடன் காணப்படுகிறது.

இந்திய சினிமா உலகில் மிகவும் பழமையான ஸ்டூடியோக்களில் ஒன்று தான் தமிழகத்தை சேர்ந்த ஏவிஎம் ஸ்டுடியோவாகும்.  இந்த ஏவிஎம் ஸ்டுடியோ தான் பல ஜாம்பவான்களை தந்தது. இந்த ஸ்டூடியோவின் ஒரு பகுதி ஏற்கனவே அடுக்கு மாடி கட்டிடம் ஆக மாறியுள்ளது. மீதமுள்ள மற்றொரு பகுதி தியேட்டராகவும், ஸ்டூடியோக்கள் செயல்பட்டு வந்துள்ளன. தற்போது அந்த இடம் புதுப்பிக்கப்பட்டு திருமணம், படப்பிடிப்பு மற்றும் பட பூஜை உன்னை நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு புது பொலிவுடன் தயாராகியுள்ளது.

இங்கு சும்மா 7200 சதுர அடியில் ரூம், ஹால் போன்றவை தயார் செய்யப்பட்டுள்ளது. இங்கு திருமண தொடர்பான நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான புக்கிங் செய்து வருகின்றனர். இப்போதைக்கு தமிழகத்தில் படப்பிடிப்பிற்காக என்று சில இடங்கள் மட்டுமே உள்ளன. மேலும் ஏவிஎம் ஸ்டுடியோ புதுப்பிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அந்த வளாகம் பிஸியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |