பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஷார்ஜா புத்தக கண்காட்சியில் வைத்து “ஐகான்” விருது வழங்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகரான ஷாருக்கான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்ஜாவில் நடக்கும் சர்வதேச புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டார். இங்கு நடிகர் ஷாருக்கானுக்கு சினிமா மற்றும் கலாச்சாரத் துறையில் சாதித்ததற்காக உலகளவிய “ஐகான்” விருது வழங்கப்பட்டது. இது குறித்து நடிகர் ஷாருக்கான் கூறியதாவது, “கதை, திரைக்கதை, வசனம் சேர்ந்தது தான் சினிமா. நாங்கள் நடனத்தின் மூலமாகவும், காட்சிகள் மூலமாகவும் தான் மனிதநேயத்தை வளர்க்கின்றோம்.
ஆனால் புத்தகங்கள் நம் வாழ்க்கையின் அங்கமாகும் நாம் எங்கு வாழ்ந்தாலும், எந்த நிறத்தில் இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தாலும் அன்பு, அமைதி, கருணையின் அடிப்படையில் தான் சிறந்து விளங்குகிறோம்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் சமீபமாக நடிகர் ஷாருக்கானுக்கு மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்க நாடுகளில் ரசிகர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று பிரபல நிறுவனம் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.