விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் பிறந்தநாளுக்கு அவரது மனைவி சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்தார்.
விஜய் டிவியின் மூலம் பிரபலமாகி நடிகர்கள் லிஸ்டில் லேட்டஸ்ட் என்ட்ரி கொடுத்த குக் வித் கோமாளி மற்றும் கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் புகழ். இவர் தற்போது பல முன்னணி ஹீரோ படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றார். இவர் ஹீரோவாகவும் ஒரு சில படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனை அடுத்து காமெடி நடிகரான புகழ் தனது காதலி பென்சியுடன் சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் புகழ் பிறந்த நாளை கொண்டாடிய அவரது மனைவி பென்சி சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கொடுத்தார். அந்த கிஃப்ட் குறித்து புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “எனக்கு கொடுத்த கிப்ட்டில் நாய்க்குட்டி இருந்தது. ரொம்ப நன்றி டி பொண்டாட்டி. தங்கம் வேற லெவல் டி செல்லம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.