த்ரிஷாவுக்கு போட்டி வந்திருச்சி என இலங்கை பெண் ஜனனியை பார்த்து கூறிய கமல்.
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் “பிக் பாஸ் 6” சீசனில் இலங்கை நாட்டை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி என்பவர் போட்டியாளராக வந்திருக்கின்றார். அவரை அறிமுகப்படுத்திய கமல் இவரும் லாஸ்லியா போல செய்தி வாசிப்பாளரா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஜனனி கூறியதாவது, செய்தி வாசிப்பாளர் + anchor என அவர் பதில் சொல்ல, கமல் அவரது அறிமுக வீடியோவை காட்டினார்.
#JANANY #BiggBossTamil6 #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம Disney+ Hotstar இல் .. @ikamalhaasan pic.twitter.com/zdAqvVbPWO
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) October 9, 2022
அதற்கு பின் பேசிய ஜனனி கூறியதாவது, “வருங்காலத்தில் என்ன ஆக போறீங்க? என நான் நர்சரி ஸ்கூல் படிக்கும்போது டீச்சர் கேட்டார். அப்பொழுது எல்லாரும் பல விஷயங்கள் சொன்னார்கள். நான் மட்டும் த்ரிஷா ஆக போகிறேன் என கூறினேன்” என்று அவர் கூறியுள்ளார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் கமல் கூறியதாவது, “உங்களுக்கு போட்டி வந்துடுச்சுனு நான் திரிஷாவை நேரில் பார்க்கும்போதே சொல்கின்றேன்” என்று அவர் அப்போது கூறியுள்ளார்.