Categories
உலக செய்திகள்

அடடே…. டுவிட்டரில் புதிய மாற்றமா….? எலான் மஸ்க்கிற்கு உதவும்…. தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் வல்லுநர்….!!!!!

டுவிட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் கொண்டு வரும் புதிய மாற்றத்திற்கு தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் வல்லுநர் உதவி வருகின்றார்.

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை கடந்த சில நாட்களுக்கு முன் வாங்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளனான எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார்.

இதனை அடுத்து அந்நிறுவனத்தின் சிஇஓ -வாக இருந்த இந்திய நாட்டை சேர்ந்த பராக் அகர்வாலை அந்நிறுவனத்தில் இருந்து அதிரடியாக நீக்கினார். இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பேசு பொருளாகியது. இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் கொண்டு வரும் புதிய மாற்றத்திற்கு தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் வல்லுனரான ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவர் உதவி செய்து வருகின்றார். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்து பின்னர் பி.டெக் படிப்பை முடித்துள்ளார். அதன் பின்னர் 21 வது வயதில் இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியைப் பெற்று பேஸ்புக் நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பில் பணியாற்றியுள்ளார்.

தற்போது இவர் ஆண்ட்ரசன் ஹாரோவிட்ஸ் (a16z) என்ற நிறுவனத்தில் பொது பங்குதாரராக உள்ளார். மேலும் கிரிப்டோ மற்றும் வெப் ஸ்டார்அப் முதலீடு சார்ந்த நிறுவனம் இயங்கி வருகின்றது. இதனை தொடர்ந்து எலான் மஸ்கிற்க்கு உதவி வருவதை ஸ்ரீராம் கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, “டுவிட்டர் நிறுவனத்தில் தற்காலிகமாக எலான் மஸ்கிற்க்கு உதவி வருகின்றேன். என்னோடு இணைந்து வேறு சிலரும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது மிகவும் முக்கியமான நிறுவனமாகும். உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதும் கூட. எலான் மஸ்க் இதனை சாதித்து காட்டுவார் என்று நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |