தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ். இந்திய ஆட்சி பணியில் பாராட்டுகளை பெற்ற இறையன்பு ஐஏஎஸ் தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்றம் ஆகிய பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் உலகை உலுக்கிய வாசகங்கள் மற்றும் போர் தொழில் பழகு போன்ற நூல்கள் முக்கியமானவையாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இறையன்பு ஒரு திரைப்படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்ததாக தற்போது அந்த படத்தின் இயக்குனர் ஆனந்த் தெரிவித்துள்ளார். ஓம் ஜெயம் தியேட்டர் தயாரிப்பில் ரிஷி மற்றும் சிங்கமுத்து ஆகியோர் பியூட்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு இறையன்பு 2 பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார். மேலும் இந்த தகவலை பியூட்டி படத்தின் இயக்குனர் ஆனந்த் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.