Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. 15 வருடங்களுக்கு பிறகு…. மீண்டும் இணைந்த பொல்லாதவன் கூட்டணி…. பிரபல நடிகை சொன்ன அசத்தல் தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் பொல்லாதவன். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக திவ்யா ஸ்பந்தனா அலைஸ் ரம்யா நடித்திருந்தார். மேலும் சந்தானம், கருணாஸ், டேனியல் பாலாஜி ஆகியவர்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரித்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் படக்குழுவினர் அனைவரும் ஒன்று திரண்டு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், திவ்யா ஸ்பந்தனா, இயக்குனர் வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ் குமார், டேனியல் பாலாஜி, தயாரிப்பாளர் கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த புகைப்படங்களை திவ்யா ஸ்பந்தனா வெளியிட்டிருந்தார். அத்துடன், “15 ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மேலும் பொல்லாதவன்‌2 படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |