Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… பிக் பாஸ் ஷிவின் வாழ்க்கையில் இப்படி ஒரு காதலா?….. கலங்கிய ரச்சிதா….!!!

விஜய்  டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டெயின்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அமோகமாக வரவேற்பு பெற்ற போட்டியாளர் ஜி.பி.முத்து இருந்தார். ஆனால் இவர் இரண்டாவது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளர். மேலும் நேற்று விஜே மகேஸ்வரி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் ரச்சிதாவிடம் தனது காதல் குறித்து ஷிவின் பேசியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், தான் ஐடியில் வேலை பார்த்த போது ஒருவருடன் நட்பாக பழகினேன். அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறிவிட்டது. காதல் பிரச்சினை இல்லாமல் நன்றாக சென்று கொண்டிருந்தது. அப்போதுதான் நான் காதலிப்பதை அம்மா கண்டுபிடித்து விட்டார். காதல் எல்லாம் உனக்கு வேண்டாம். உன்னை பற்றி விஷயம் அவங்க குடும்பத்துக்கு தெரிந்தால் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்‌. அந்த குடும்பத்தின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று கூறினார். இதனையடுத்து அம்மாவின் பேச்சை கேட்டு தனது காதலை மறந்து விட்டேன். ஆனால் அவர் தொடர்ந்து என்னிடம் பேச முயற்சி செய்தார். தற்போது அவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். அவர் நல்ல பெண்ணை கல்யாணம் செய்து நல்லபடியாக வாழ்ந்தால் எனக்கு மகிழ்ச்சி தான் என்று உருக்கமாக பேசினார். இதனைக் கேட்ட ரச்சிதா அவருக்கு ஆறுதல் கூறினார்.

Categories

Tech |